கணவனை கிரைண்டரில் அரைத்து வீசிய மனைவி - குழந்தைகள் ஷாக் வாக்குமூலம்
கிரைண்டரில் அரைத்து சிதைக்கப்பட்ட நிலையில் ஆணின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.
தகாத உறவு
உத்தரபிரதேசம், சந்தௌசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில் ராகுல் என டாட்டூ குத்தப்பட்ட கையை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து தனது கணவர் ராகுலை காணவில்லை என ரூபி என்பவர் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. பின் விசாரணையில், ராகுல் - ரூபி தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 12 வயது மகன், 10 வயது மகள் இருக்கின்றனர்.
மனைவி கொடூரம்
அதில் மகள் 3 பேர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகவும், சில சமயங்களில் சாக்லேட்டுகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, ரூபி தனது காதலன் கௌரவ் உடன் சேர்ந்து கணவரை கொலை செய்து,
உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கிரைண்டரில் அரைத்து பாலித்தீன் பைகள் மூலம் பல்வேறு பகுதிகளில் வீசியது தெரியவந்தது.
சுத்தி, கிரைண்டர், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரூபி, கௌரவ் ஆகியோரை கைது செய்தனர். தற்போது ராகுலின் தலை மற்றும் பிற உடல் பாகங்களை மீட்க போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.