உறவின்போது கணவர் மரணம்; கதறிய மனைவி - வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Attempted Murder Telangana Crime
By Sumathi Oct 25, 2025 12:44 PM GMT
Report

கணவனுக்கு சுயநினைவு போய்விட்டது என்று நாடகம் போட்ட மனைவி சிக்கியுள்ளார்.

தகாத உறவு

தெலங்கானா, சத்பகிரி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சுரேஷ்(35). இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மவுனிகா, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

உறவின்போது கணவர் மரணம்; கதறிய மனைவி - வெளிச்சத்துக்கு வந்த உண்மை! | Wife Killed Husband Due To Illicit Relationship

அப்போது அஜய் என்பவருடன் பழகி தகாத உறவாக மாறியுள்ளது. இதற்கிடையில் கணவர் சுரேஸ், மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

எனவே அவரது தோழி வயாகரா மாத்திரைகளை வாங்கி வந்து சில நாட்களுக்கு முன்பு மவுனிகாவிடம் தந்திருக்கிறார். பின் மட்டன் குழம்பு வைத்து, அதில் வயாகரா மாத்திரைகளை கலந்து சுரேஷூக்கு சாப்பிட தந்துள்ளார். ஆனால், மட்டன் குழம்பில் வித்தியாசமான வாசனை வரவே, அதனை சுரேஷ் சாப்பிட மறுத்துள்ளார்.

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!

மனைவி வெறிச்செயல்

இதனால் இரவு BP மாத்திரை, தூக்க மாத்திரைகளை பவுடர் செய்து, மதுபானத்தில் கலந்து சுரேஷூக்கு தந்துள்ளார். அந்த மதுவை குடித்த சுரேஷ் சிறிதுநேரத்தில் மயங்கி விழ, அவரை தன்னுடைய புடவையால் தூக்கு மாட்டி தொங்கவிட்டார். இதில் சுரேஷ் துடிதுடித்து இறந்துவிட்டார்.

உறவின்போது கணவர் மரணம்; கதறிய மனைவி - வெளிச்சத்துக்கு வந்த உண்மை! | Wife Killed Husband Due To Illicit Relationship

பின் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, இருவரும் உல்லாசமாக இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார் என்று அவரது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சுரேஷின் அம்மா, உடனடியாக அவரை மீட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்ததில், மவுனிகாவின் கள்ளக்காதல் அம்பலமானது. இறுதியில், மவுனிகா, கள்ளக்காதலன் அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.