திருமணத்தை மீறிய உறவு - யூடியூப் பார்த்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!
பெண் யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
தெலுங்கானா, கிசான் நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ரமாதேவி. சம்பத் மாவட்ட நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் மது போதையில் அடிக்கடி தனது மனைவியை அடித்து செலவுக்கு பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளார். வறுமையால், ரமாதேவி தோசை மாவு விற்பனை செய்து வந்தார். அப்போது அவரிடம் மாவு வாங்க அடிக்கடி வரும் ராஜய்யா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியுள்ளார். அப்போது மனிதர்களின் காதில் பூச்சி மருந்தை ஊற்றினால் இறந்து விடுவார்கள் என்று அவருக்கு ஒரு youtube வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ரமாதேவியின் திட்டத்திற்கு ராஜய்யாவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவி வெறிச்செயல்
தொடர்ந்து ராஜய்யா தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து, மது அருந்தலாம் என்று சம்பத்தை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சம்பத் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ராஜய்யா ஊற்றியுள்ளார்.
காது ஜவ்வு மூலம் பூச்சி மருந்து உறிஞ்சப்பட்டு அது ரத்தத்தில் கலந்து சம்பத் இறந்துள்ளார். இந்நிலையில், சம்பத்தின் உடல் கிடைத்ததாக அவர்களே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் சம்பத் - ரமாதேவி தம்பதியின் மகன் பரத் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.
தொடர் விசாரணையில், கொலையை தாங்களே செய்ததாக ரமாதேவி ஒப்புக்கொண்ட நிலையில், ரமாதேவி, ராஜய்யா மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்திய பூச்சிகொல்லி மருந்தையும் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.