கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய கொடூர மனைவி - பொதுமக்கள் அதிர்ச்சி

illegalrelationship wifekilledherhusband
By Petchi Avudaiappan Dec 25, 2021 11:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கட்டையால் அடித்துக்கொன்ற கொடூர மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியில் மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த சேதுபதி  என்பவர்  மனைவி பிரியா மற்றும்  2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சேதுபதிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய கொடூர மனைவி - பொதுமக்கள் அதிர்ச்சி | Wife Killed Her Husband Along With Her Boyfriend

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியா அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தண்ணீர் பிடித்து வைக்கப்படும் டிரம்மை வெளியே தூக்கி கொண்டு வந்தார். அப்போது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பிரியாவிடம் ஏன் துர்நாற்றம் வருகிறது என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அவர்கள் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பிரியா எடுத்து வந்த டிரம்மை திறந்து பார்த்தனர். அப்போது அதில் அழுகிய நிலையில், பிரியாவின் கணவர் சேதுபதியின் உடல் இருந்தது. மேலும் அவரை கொலை செய்து டிரம்முக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக பிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தனது கணவரை, கள்ளக்காதலன் சதீஷ்குமார்  என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

பிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடிக்கடி பிரியாவின் வீட்டுக்கு சென்று, தேவையான உதவிகளை செய்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக சேதுபதி இல்லாத நேரத்தில் சதீஷ்குமாரும், பிரியாவும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பிரியாவின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த சேதுபதி அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரியா, கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.கடந்த 17 ஆம் தேதி வழக்கம் போல மதுகுடித்துவிட்டு சேதுபதி வீட்டுக்கு வந்தார். அப்போது பிரியாவும், சதீஷ்குமாரும் சேர்ந்து சேதுபதியை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

இதையடுத்து அவருடைய உடலை வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்கப்படும் டிரம்முக்குள் அடைத்து வைத்தனர். உடல் வெளியே தெரியாமல் இருக்க அதன் மீது தலையணை மற்றும் போர்வை உள்ளிட்ட துணிகளை வைத்து மூடினர்.இந்த நிலையில் சேதுபதியின் உடல் அழுகியதால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் பிரியா, சதீஷ்குமார் ஆகியோர் சேதுபதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்து சென்று வீசிவிட முடிவெடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது டிரம்மை வெளியே எடுத்து வந்தனர். அப்போது துர்நாற்றம் கடுமையாக வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதையடுத்து கள்ளக்காதலர்கள் பிரியா மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.