மனைவியின் நடத்தையில் சந்தேகம் - கொன்று டிவியின் அடியில் மறைத்து வைத்த கொடூரம்

chennai crime tamil nadu wife murdered by husband
By Swetha Subash Dec 23, 2021 06:17 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவன் தலை மறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ரமேஷ் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் 41 வயதான இவரது மனைவி வாணிக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு கௌதம்( 15 ), ஹரிஷ்( 12 ) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடும் ரமேஷுக்கு வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்பு திங்கட்கிழமை இரவு ரமேஷ் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரமேஷின் மூத்த மகன் கௌதம், அம்மா எங்கே என்று கேட்ட போது அம்மா வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்டார் என்று கூறி சென்றுள்ளார்.

அன்று இரவு வீட்டில் கௌதம் மற்றும் அவரது நண்பர் மட்டுமே இருந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயை தேடி உள்ளனர். மேலும் தந்தையையும் காணவில்லை என உறவினர்கள் இடத்தில் கூறி உள்ளனர்.

கௌதம் , ஹரிஷ் மற்றும் கௌதமின் நண்பர் ஒருவர் என மூன்று பேர் மட்டுமே வீட்டில் உறங்கியுள்ள நிலையில், வாணியின் இளைய மகன் எழுந்து பார்த்த போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டுள்ளார்.

மேலும் லேசான துர்நாற்றமும் வந்ததை அடுத்து இதுகுறித்து வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலே வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார் டிவி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் டேபிள் அடியில் துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வாணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாணியின் கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.