ஹவுஸ் ஓனருடன் மனைவி தகாத உறவி - அப்பாவி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

murder husband wife kill
By Anupriyamkumaresan Jul 12, 2021 07:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

நாமக்கல் அருகே கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் ஒய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவரை மர்ம கும்பல் ஒன்று கடந்த 5ம் தேதி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

ஹவுஸ் ஓனருடன் மனைவி தகாத உறவி - அப்பாவி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி! | Wife Kill Husband For Love Affair

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவக்குமாரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த சிவக்குமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பணி ஒய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது சிவக்குமாரும், அவரது மனைவி பார்கவியும் செல்வக்குமார் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடிபுகுந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டின் உரிமையாளருக்கும், பார்கவிக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் பக்கத்து வீடு என்பதால் பகல், இரவு என பாராமல் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் கணவன் சிவக்குமாருக்கு தெரியவே, சிவக்குமாரும் மனைவியை கண்டித்துள்ளார்.

ஹவுஸ் ஓனருடன் மனைவி தகாத உறவி - அப்பாவி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி! | Wife Kill Husband For Love Affair

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கூலிப்படை பயன்படுத்தி கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த 5 பேர் மற்றும் பார்கவியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.