நடுரோட்டில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவன் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, மோகனாம்பாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மோகனாம்பாள் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில் அவரைப் பின் தொடர்ந்து வந்த அவரது கணவன் மோகனாம்பாளை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட மோகனாம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதுமட்டுமின்றி மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பிய கணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.