சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்... - ஓசூர் அருகே கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சோகச் சம்பவம்
ஓசூர் அருகே மாரடைப்பால் கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாணிக்கம் (70). இவருடைய மனைவி கோமதி (63).
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு மாணிக்கத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கணவர் உயிரிழந்த தூக்கம் தாளாமல் மனஅழுத்தில் இருந்தார் கோமதி. சோகத்தில் இருந்த கோமதி திடீரென இன்று காலை 8 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருமண வாழ்க்கையில் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதிகள் சாவிலும் இருவரும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
