மனைவியை கண்டித்த கணவன் - குழந்தையுடன் பெண் செய்த விபரீதம்!

Kanchipuram Death
By Vinothini Jun 04, 2023 06:05 AM GMT
Report

 கணவன் மனைவியை கண்டித்ததால் மனமுடைந்த பெண் தனது குழந்தையுடன் செய்த விபரீத செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டித்த கணவன்

காஞ்சீபுரம் மாநகராட்சி, செட்டிகுளத்தில் உள்ள என்ஜி.ஓ. நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்.

இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா, இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

wife-hanged-herself-with-child-after-husband-scold

இவர்களுக்கு ஜிஷ்ணுஎன்ற 3 வயது மகன் உள்ளார். தொடர்ந்து சரண்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது அவர் வேலைக்கு சென்றால் குழந்தையை கவனிக்க முடியாது என்பதால் இவரது கணவன் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கண்டித்துள்ளார்.

விபரீதம்

இந்நிலையில், இவரது மனைவி மனமுடைந்து போனார்.

மேலும், இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

wife-hanged-herself-with-child-after-husband-scold

இது குறித்து தகவல் அறிந்துவந்த சிவகாஞ்சி போலீசார் இவர்களது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.