மகளுக்காக கிட்னியை விற்ற கணவர் - பணத்துடன் காதலனிடம் ஓடிய மனைவி
கணவரின் கிட்னியை விற்ற பணத்துடன் மனைவி காதலனுடன் தஞ்சமடைந்துள்ளார்.
கிட்னி விற்ற கணவர்
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த பெண் தனது கணவர் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே அந்த பெண், மகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்கு பணம் தேவைப்படுமென தனது கணவரை கிட்னியை விற்குமாறு கட்டாயபடுத்தியுள்ளார்.
காதலனுடன் ஓடிய மனைவி
ஒரு வருடமாக அவரும் கிட்னியை விற்க முயற்சித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ரூ.10 லட்சத்திற்கு தனது கிட்னியை விற்றுள்ளார். அந்த பணத்தை பெற்ற பெண், தனது மகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு, பேஸ்புக் காதலரான ரவிதாசன் என்பவருடன் தஞ்சமடைந்து விட்டார்.
இதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணவர் அந்த பெண்ணின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பாரக்பூரில் காதலர் ரவிதாஸுடன் சேர்ந்து வாழ்வதை அறிந்த கணவரின் குடும்பத்தினர்,10 வயது மகளை அழைத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் கழித்து கதவை திறந்த பெண், "நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன்" என கூறி கதவை சாத்தி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.