உயிர் நன்பனுடன் ஓடிய மனைவி - ஓடும் போதும் கணவனுக்கு செய்த பகீர் செயல்!
இளைஞருடன் பெண் ஒருவர் குழந்தைகளோடு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கர்நாடகா, நந்தகடாவை சேர்ந்தவர் ஆசிப்(33). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி மாசாவி(28). இவர்களுக்கு மாஹிரா (7), அனியா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆசிப்பின் நெருங்கிய நண்பர் பசவராஜ்(30). அதே பகுதியைச் சேர்ந்த இவர் அடிக்கடி ஆசிப் வீட்டிற்கு வந்துச் சென்றுள்ளார். அப்போது மாசாவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
எஸ்கேப் ஆன மனைவி
இந்நிலையில், தனது 2 குழந்தைகளுடன், கள்ளக்காதலன் பசவராஜுடன் வீட்டை விட்டே ஒடியுள்ளார். மேலும், செல்கையில் கணவர் ஆசிப்பின் கார், 2 சொத்து ஆவணங்கள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து அறிந்த ஆசிப், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் பசவராஜ் குறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், மனைவி, குழந்தைகள் மற்றும் சொத்து ஆவணங்கள், தங்க நகை, கார், பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
பசவராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து போலீஸார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.