கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவம்; 250 நண்பர்களுக்கு மது விருந்து வைத்த கணவன் - Video வைரல்!

Kerala India
By Jiyath Oct 08, 2023 07:50 AM GMT
Report

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் நண்பர்களுக்கு விருந்து வைத்து கணவன் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிப்போன மனைவி

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் 40 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவம்; 250 நண்பர்களுக்கு மது விருந்து வைத்த கணவன் - Video வைரல்! | Wife Elopes With Lover Husband Party To Friends

திருமணம் நடந்தது முதலே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மனைவி சொல்லாமல் கொள்ளாமல் கள்ளக் காதலனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

விருந்து வைத்த கணவர்

இதனையடுத்து வாழ்வில் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக கூறிய கணவர், 250க்கும் மேற்பட்ட தனது நண்பர்களுக்கு வீட்டில் பிரியாணியுடன், மது விருந்து வைத்துள்ளார். கணவன் மற்றும் அவரின் நண்பர்கள் மது அருந்திவிட்டு உற்சாகத்துடன் பாடல் போட்டு நடனமாடியுள்ளனர்.

கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவம்; 250 நண்பர்களுக்கு மது விருந்து வைத்த கணவன் - Video வைரல்! | Wife Elopes With Lover Husband Party To Friends

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வ்ரைளாகியுள்ளது. ஆனால் கணவன் தினமும் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்ததால் மனைவி மனமுடைந்து வேறொருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி கள்ளக்காதலனுடன் ஒட்டிப்போனதை ஊருக்கே விருந்து வைத்து கணவன் கொண்டாடிய சம்பவம் கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது.