விபத்தால் மனைவி திடீர் மரணம்- மகளை வைத்து கணவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த James Alvarez மற்றும் Yesenia தம்பதி, தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்திக் கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாததால் வருத்தத்திலேயே இருந்து வந்துள்ளனர்.
இதனால், பல மருத்துவர்களைச் சந்தித்தும், பல மருத்துவமனை வாசலில் ஏறி இறங்கியும் எந்த பலனும் இல்லாமல் போனது. ஆனால் இருவரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், இறுதியாக Yesenia கர்ப்பமடைந்தார்.
இதன் காரணமாக சந்தோசத்தின் உச்சிக்கு சென்ற இருவரும், ஒருவரை ஒருவர் அக்கரையுடன் இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் அவரது கணவர் James Alvarez வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஜீப் ஒன்று சாலையைத் தாண்டி நடைபாதையில் ஏறி Yesenia மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Yeseniaவின் வயிற்றிலிருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக யேசேனியா பரிதாபமாக உயிரிழந்தார்.
Yesenia மீது காரை மோதியதற்காகக் கைது செய்யப்பட்ட Courtney Pandolfi (40) என்ற பெண், ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவரது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டிருந்ததுடன், Courtney விபத்தை ஏற்படுத்தியபோது, போதைப்பொருள் அருந்தி இருந்ததும் தெரியவந்தது.
இதனிடையே மனைவி மீது பேரன்பு கொண்ட James, மனைவியின் நினைவு நாளில் அவரது நினைவுகளை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தார். அவர் தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவருடன் என்னென்ன புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாரோ, அதே போன்ற புகைப்படங்களை தற்போது, அதே இடங்களில் தன் மகளுடன் எடுத்துக்கொண்டுள்ளார்.

தன் மகள் Adalynயின் பிறந்தநாளும், தன் மனைவி Yeseniaவுடைய இறந்த நாளும் ஒன்று என்பதால், அன்று தன் மனைவியின் நினைவாகவும், தன் மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவும் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை கண்ட பொதுமக்கள், கண்களில் நீர் ததும்ப லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.