மனைவி- மகளை கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்த நபர்

Dharmapuri
By Fathima Jul 01, 2026 05:36 AM GMT
Report

கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்றுவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் சந்தோஷ்.

தர்மபுரியின் முண்டாசுபுறவடை கிராமத்தில் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்தவர் திடீரென குறுக்கே வந்ததால் லொறி மோதி பலியானார்.

இவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில் அன்னசாகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 45) என்பது தெரியவந்தது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார், திமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.

இவர் இறந்த தகவலை தெரிவிக்க போலிசார் வீட்டிற்கு சென்ற போது, வெளியில் பூட்டு போடப்பட்டிருந்தது, ஆனால் வீட்டிற்குள் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் போலிசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

மனைவி- மகளை கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்த நபர் | Wife Daughter Investigation Begins

அங்கே அவரது மனைவி சரண்யா மற்றும் மகள் சாத்விகா ரத்த வெள்ளத்தில் கிடந்தனர், இவர்களது உடலை கைப்பற்றிய போலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் மனைவி, மகளை கொன்றுவிட்டு தன்உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், நான் யாரையும் ஏமாற்றவில்லை, மனைவி, மகளை மகாராணி போல் வைத்திருந்தேன், அவர்களை என்னுடன் அழைத்து செல்கிறேன், எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நான் இறக்கப்போகிறேன், உறவினர்கள் நண்பர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என பேசியுள்ளார்.