கணவனோடு பழகிய பெண்ணுக்கு நடுரோட்டில் நேர்ந்த கொடூரம் - மனைவி செய்த கோர செயல்!
குஜராத்தில் கணவனோடு பழகிய ஒரு பெண் மீது சந்தேகப்பட்ட மனைவி, நடுரோட்டில் வைத்து அவரின் தலைமுடியை துண்டு துண்டாக்கி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள கடோதரா பகுதியில், புலம் பெயர்ந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒருவர் வேலை வாங்கி கொடுத்து பல உதவிகள் செய்து வந்தார். இதனை கண்ட அவரின் மனைவி இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார்.
இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்த பெண் தனியாக வீட்டிலிருந்த நேரத்தில் பல பேரோடு வீடு புகுந்து அவரை நடு வீதிக்கு இழுத்துவந்தார்.
இதனை தொடர்ந்து அவரின் தலை முடியை நடுரோட்டிலேயே வெட்டி கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து சகந்தி மசானியா, கராரவி ராமு உள்ளிட்ட 4 பேரை போலீசார்
அதிரடியாக கைது செய்தனர்.