மனைவி தூங்கும்போது நிர்வாண படமெடுத்து, வரதட்சணை கேட்டு மிரட்டிய கொடூரக் கணவன் - பரபரப்பு சம்பவம்
கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து (32). இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோவையில் வங்கியில் வேலை பார்க்கும் 27 வயது பெண்ணிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது பெண்ணிற்கு 51 பவுன் நகையும், 5 லட்சம் ரூபாயும் சீதனமாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
ஆனால், பண ஆசை பிடித்த பிச்சைமுத்து, பெயருக்கேற்றவாறு அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு ஒன்று கோவையில் உள்ளது. அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி, அந்த பெண்ணிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். வீட்டை எழுதி தராவிட்டால், உன்னிடம் நான் வாழ மாட்டேன் என்று மிரட்டி வந்துள்ளார்.
அந்த பெண்ணிற்கு முகத்தில் ஒரு பெரிய பரு உள்ளது. அந்த பருவை காரணம் காட்டி, தினமும் அப்பெண்ணை இழிவுப்படுத்தி வந்துள்ளார். இதனால், அப்பெண் மனவேதனையுடன் பிச்சைமுத்துவிடம் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
கொடூரத்தின் உச்சிக்கே சென்ற பிச்சைமுத்து, மனைவி தூங்கும்போது, அவருக்கே தெரியாமல் நிர்வாணமாக படமெடுத்து வைத்துள்ளார்.
இந்த படங்களை அப்பெண்ணிடம் காட்டி பெற்றோரிடமிருந்து வீட்டை வாங்கி தரவில்லையென்றால், இந்த படங்களையெல்லாம் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவரின் கொடுமையை தாங்கமுடியாமல், அப்பெண் தன் பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை பதிவு செய்த போலீசார் பிச்சை முத்துவை கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.