‘முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்கார கணவன்...’ - கலெக்டரிடம் மனைவி பரபரப்பு புகார்

By Nandhini May 24, 2022 07:10 AM GMT
Report

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது -

கடந்த ஆண்டு ஜுன் 13ல் எனக்கும், என் கணவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் வரதட்சணையாக ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும், கணவருக்கு 5 பவுன் நகையும் எங்கள் வீட்டில் போட்டனர். 

திருமணம் ஆன முதலிரவில் என்னிடம் அவர் மிருகத்தனமாக நடந்து கொண்டார். மாத்திரைகளை கொடுத்து விருப்பமின்றி உடலுறவு கொண்டார்.

14 நாள் என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, கோவை சென்று வருவதாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு எந்த தொடர்பும் இல்லை. போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார். எனது நிலை பற்றி, என் தாய், மாமனார் குடும்பத்தினரிடம் கேட்டார்.

உங்க தகுதி என்ன எங்கள் தகுதி என கேட்டு அவமானப்படுத்தினர். எங்கள் மகனுக்கு ஜாதகம் சரியில்லை. அதனால், தோஷம் கழிக்க உங்க மகளை திருமணம் செய்து வைத்தோம்.

பிறகு போனில் தொடர்பு கொண்ட கணவர், சத்தம் போடாமல் யாரையாவது திருமணம் செய்து கொள். இல்லையென்றால், முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன்.

அதை வெளியிட்டு உன்னை சாகடித்து விடுவேன்' என்று மிரட்டினார். முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.   

‘முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்கார கணவன்...’ - கலெக்டரிடம் மனைவி பரபரப்பு புகார் | Wife Complains Of Agitation Husband