ஜாக்கிங் செல்வதாக கூறி கள்ளக்காதலியுடன் மீட்டிங் - வசமாக சிக்கிய கணவர் :வைரல் வீடியோ

viral video cheatinghusband
By Petchi Avudaiappan Sep 30, 2021 11:53 PM GMT
Report

 தினமும் ஜாக்கிங் செல்வதாக கூறி பார்க்கில் கள்ளக்காதலியை சந்தித்த நபர் ஒருவர் மனைவியிடம் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில் ஒரு பார்க்கின் பெஞ்சில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். அவரின் அருகே ஒரு பெண் அமர்ந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அப்பெண் அந்த நபரின் தோளில் சாய முயல்கிறார். அப்பொது பின்னால் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது.

வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் அப்பெண் “ஜாக்கிங் போகிறேன் என்று தினமும் இந்த வேலை தான் நடக்கிறதா?” என கேட்கிறார். அதனை கேட்டதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் எழுந்து நடக்க தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அந்த நபரை விடாமல் துரத்தும் அப்பெண் திட்டிக்கொண்டேஇருக்கிறார்.

அவர் எப்படி மாட்டிக்கொண்டார் என்றால் தினமும் ஜாக்கிங் செல்கிறேன் என அதிகாலையிலேயே வீட்டிலிருந்து வெளியே சென்று வந்துள்ளார். சில மாதம் ஜாக்கிங் சென்றும் அவர் உடல் எடை குறையவேயில்லை.

அதனால் சந்தேகமடைந்த மனைவி ஒருநாள் கணவருக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்தபோது தான் தெரிந்தது கணவர் ஜாக்கிங் செல்கிறேன் என வெளியில் சென்று தன் கள்ளக்காதலியுடன் நேரம் செலவிட்டு வந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.