இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரைக் காரோடு எரித்த மனைவி
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கார் தீப்பற்றி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மனைவியே கொலை குற்றவாளி என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் துடுப்பதி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் காயமடைந்தார்.
கோவையில் ஒரு மாத சிகிச்சைக்கு பின் குணமடைந்த ரங்கராஜனை நேற்று மனைவி ஜோதிமணி மற்றும் அவரது உறவினர் ராஜாவும் காரில் திருப்பூருக்கு அழைத்து வந்தனர். பொரசிபாளையம் அருகே காரை சாலையோரம் நிறுத்தி இருந்தபோது எதிர்பாராத விதமாக கார் பற்றி எரிந்துள்ளது இதில் ராஜா மற்றும் ஜோதி மணி இருவரும் தப்பியுள்ளனர் அனால் ரங்கராஜன் மற்றும் சாறோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகினார்.
இது குறித்து காருக்குள் இருந்த மூன்று பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்தது சந்தேகத்தை பொலிஸாருக்கு ஏற்படுத்தியதால் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதன்படி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ராஜா மற்றும் ஜோதிமணி இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அது என்னவெனில் ஜோதிமணி அவரது கணவர் போட்டு வைத்திருந்த 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக காரோடு கணவரை எரித்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி காருடன் எரித்த மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.