டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு... கணவரை கொடூரமாக தாக்கிய மனைவி
மத்தியப்பிரதேசத்தில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை தாக்கிய பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது.
பொதுவாக கணவன் மனைவிக்குள் நடைபெறும் சண்டைகள் என்பவை மிகவும் சாதாரணமானமாக ஒன்றாகவே இருக்கும். சில நேரங்களில் வேடிக்கையாகவும், சில நேரங்களில் வேதனையாகவும் அந்த சண்டைகள் அமையலாம். அந்த வகையில் கணவனுடனா ஏற்பட்ட தகராறில் மனைவி அவரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரை சேர்ந்த சஞ்சய் சோனி என்பவரை கடந்த சில நாட்களாக அவரது மனைவி டிவி அதிகம் பார்க்கக்கூடாது என சோனியை எச்சரித்து வந்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சஞ்சய் இருந்திருக்கிறார்.
இந்த சமயத்தில் கடந்த ஹோலி தினத்தன்று கணவர் அதிகமாக டிவி பார்ப்பதாக குற்றம் சாட்டியதால் வழக்கம்போல சண்டை தொடங்கி இருக்கிறது.இது கைக்கலப்பாக மாற ஆத்திரமடைந்த மனைவி சஞ்சையை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது இடது கண் சேதமடைந்தது.
கணவனைக் காயப்படுத்திய பிறகு எந்தவித சலனமும் இல்லாமல் அந்தப் பெண் அவரின் சேமிப்பு மற்றும் நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெற்றோரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தற்போது அந்த நபர் தனது மனைவி மீது புகார் அளிக்க மனுவுடன் காவல் நிலையத்தை நாடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.