காதலனை மறக்கமுடியவில்லை - கணவனுக்கு காஃபியில் விஷம் கலந்த மனைவி
மனைவி, கணவனுக்கு காஃபியில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலனுடன் உறவு
உத்தரப் பிரதேசம், பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் ஷர்மா(30). இவர் பிங்கி(26) என்ற பெண்ணை 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின் சில காலம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. ஏனென்றால், பிங்கி ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டதால், தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
கணவனுக்கு விஷம்
எனவே, காதலனுடன் ஃபோனில் பேசி வந்துள்ளார். இதனையறிந்த கணவன் கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு மனைவி செவி சாய்க்காததால், அவரை அறைந்துள்ளார். இதனால் பிங்கு கோபமடைந்து போலீஸில் புகாரளித்துவிட்டு, அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென கணவனுக்கு காஃபி போட்டு கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் அவர் மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது சகோதரி உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அப்போதுதான் பிங்கி காஃபியில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. அதற்குள் பிங்கி தலைமறைவாகியுள்ளார். தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.