வீடு புகுந்து கணவன், மாமியாரை அடித்து ஓடவிட்ட மருமகள் - 2வது மனைவிக்கும் அடி!

Tamil nadu India Salem
By Jiyath Sep 23, 2023 07:04 AM GMT
Report

வீட்டிற்குள் புகுந்து கணவன், மாமியாரை மனைவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வீடு புகுந்து தாக்கிய மனைவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு ஆத்தூர் நேரு நகரை சேர்ந்த அபிப்பிராமி என்பவருடன் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

வீடு புகுந்து கணவன், மாமியாரை அடித்து ஓடவிட்ட மருமகள் - 2வது மனைவிக்கும் அடி! | Wife Attacking Husband And Mother In Law Salem

திருமணம் நடந்த 2 ஆண்டுகளில் மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார் செந்தில் குமார். 2018ம் ஆண்டு ஊர் திரும்பிய செந்தில் குமார் மனைவியை அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் சென்றதாகவும், பின்னர் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை மீண்டும் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சியை சிறந்த லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் செந்தில்குமார். இந்த விவகாரம் மனைவி அபிராமிக்கு தெரியவந்ததால், கணவன் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார் அபிராமி.

போலீசார் விசாரணை

மேலும், வீட்டிற்குள் புகுந்து இரண்டாவது மனைவியான லாவண்யாவை தாக்கிய அபிராமி, தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய மாமியாரையும் தாக்கியுள்ளார்.

வீடு புகுந்து கணவன், மாமியாரை அடித்து ஓடவிட்ட மருமகள் - 2வது மனைவிக்கும் அடி! | Wife Attacking Husband And Mother In Law Salem

இதனை தடுக்க முயன்ற கணவன் செந்தில்குமாருக்கு சில அடிகள் விழுந்ததால், அவர் வீட்டை விட்டு வெளியே சென்று "6 வருஷமா எங்கே சென்றிருந்தாய்? என்று கேள்வி கேட்டுள்ளார். இதனைக் கேட்ட அபிராமி "நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, உனக்கு இன்னொரு பெண் கேட்கிறதா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அதற்கு செந்தில் குமார் "அவர் இரண்டாவது மனைவி கிடையாது, வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண் என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அபிராமியின் உறவினர்களும் வீட்டிற்குள் புகுந்து நியாயம் கேட்டுள்ளனர். பின்னர் கணவன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் அபிராமி. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடு புகுந்து தாக்குதல் மற்றும் சட்ட விரோத திருமணம் என இருதரப்பு புகார்களையும் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.