கள்ளக்காதலனுடன் மனைவிக்கு திருமணம் நடத்தி வைத்து ரத்தம் சொட்ட சராமரியாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்
திரிபுரா, கோவாய் மாவட்டம், மத்திய கிருஷ்ணாபூரைந்த ஒருவர் தன் மனைவியை சந்தேகப்பட்டு வந்துள்ளார். தன் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தன் மனைவியை அந்த நபருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் கணவர்.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை தனக்கு சேர்ந்தவர்கள் 15 பேரை அழைத்துக்கொண்டு, தன் மனைவியை நெல்வயல் பகுதிக்கு தரதரவென தலையைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார் கணவர். அந்த இடத்தில் 15 பேர் கொண்ட கும்பலால் அப்பெண்ணின் காதலன் இழுத்து வரப்பட்டார்.
அக்கும்பல் இவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியது. இந்தக் கும்பல் தாக்கியதில் இருவருமே ரத்தம் சொட்டி மயங்கி விழுந்தனர். அப்போதும், அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்து இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளச் செய்து கட்டாய திருமணம் நடத்தி வைத்துள்ளது அக்கும்பல்.
இவர்கள் சுயநினைவு இழந்து மயங்கியதையடுத்து, அக்கும்பல் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டது. அங்கிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தெலியமுரா போலீசார் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
அந்த வாக்குமூலத்தில், தனது கணவர் தான் இந்த கொடுமையை செய்ததாக அப்பெண் புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து, 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன் மனைவி கள்ள உறவில் இருந்து வந்ததால், கள்ள காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ளேன். ஆத்திரத்தால் மனைவியை சேர்த்து வைத்து தாக்கினேன் என்று கூறியுள்ளார்.

சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan