திருமணத்தை மீறிய தகாத உறவு; பறிபோன உயிர் - இழப்பீடு கேட்ட மனைவி!
காதலியின் காரில் பயணித்துக் கொண்டிருந்த நபர், திடீரென்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
சீனாவைச் சேர்ந்தவர் வாங். இவருக்கு திருமணமான நிலையில், லியு என்ற பெண்ணை சந்தித்துள்ளார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.
மேலும் இருவருமே திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் உணவகம் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு குடிபோதையில் காரில் சென்று கொண்டிருந்தனர். லியு வாகனம் ஓட்டியுள்ளார்.
வாங் குடித்துவிட்டு, சீட்பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்துள்ளார். திடீரென ஓடும் காரில் இருந்து வாங் கீழே தவறி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக 24 மணி நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி வாங் உயிரிழந்தார்.
இழப்பீடு கேட்ட மனைவி
பின் இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், வாங் சீட் பெல்ட் அணியத் தவறியதாலேயே காரிலிருந்து கீழே விழ நேர்ந்ததாகவும், இதில் லியு மீது எந்த தவறும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர்.
இருப்பினும், வாங்கின் மனைவி தனது மறைந்த கணவரின் காதலியிடம் இழப்பீடாக 6 லட்சம் யுவான் (சுமார் ரூ.70.36 லட்சம்) கேட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,
அவரது கணவர் இறந்து போனதற்கு ஏதோ ஒரு வகையில் லியூ காரணமாக இருந்துள்ளார் என்பதற்காக, அவர் 65,000 யுவான் (சுமார் ரூ. 8 லட்சம்) செலுத்துமாறு உத்தரவிட்டார்.