வெளிநாட்டில் கணவன் - உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் மனைவி போட்ட ஸ்கெட்ச் - அதிர்ச்சி..!
திருமணம் மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொல்ல மனைவியே திட்டம்போட்டுக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் மீறிய உறவு
திருப்பத்தூர் மாவட்டம் கோயன்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவருக்கு வினிதா என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கட்டட வேலைக்காக மலேசியாவுக்குச் சென்ற விஜயகுமார் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது தனது மனைவி வினிதாவின் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூரை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த தனது நண்பனான ராகவேந்திரா என்பவருடன் வினிதா திருமணம் மீறிய உறவில் இருப்பதை விஜயகுமார் கண்டுபிடித்தார். அவர் மலேசியாவில் இருந்தபோதோ வினிதாவும், ராகவேந்திராவும் அடிக்கடி வீட்டில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
மேலும், இருவரும் ஒன்றாக ஊர்சுற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவி வினிதாவிடம் கேள்வியெழுப்பி சண்டை போட்டதால், அவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆந்திர மாநிலம் மல்லானூர் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலன் ராகவேந்திரா, சங்கர் என்பவரை உடன் அழைத்துக்கொண்டு விஜயகுமாரைச் சந்திக்க சென்றுள்ளார்.
கணவன் கொலை
அங்கு அவரை சந்தித்து "உன் மனைவியும் நானும் அப்படியில்லை" என்று கூறி மல்லகுண்டா அருகேயுள்ள பலக்கல்பாவி முருகர் கோயில் மலை அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மூவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியதும் "உன் மனைவி எனக்குத்தான். தடையாக நீ மட்டும்தான் இருக்க" என்று கூறி மறைத்துவைத்திருந்த கத்தியால், விஜயகுமாரைக் குத்தி கொலை செய்துள்ளனர். முகத்தைச் சிதைக்க கல்லைத் தூக்கி தலையில் போட்டுள்ளனர். இதனையடுத்து குழிதோண்டி சடலத்தை அரைகுறையாக புதைத்துவிட்டு தப்பி ஒட்டியுள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் கொலைசெய்யப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரியவர விசாரணை மேற்கொண்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலையாளிகள் ராகவேந்திரா, சங்கர் இருவரும் பிடிபட்டனர்.
மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கணவனை கொலை செய்ய முன்கூட்டியே மனைவி வினிதாவே திட்டம்போட்டுக் கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பதுங்கியிருந்த வினிதாவை கைது செய்த போலீசார் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். மேலும், கைக்குழந்தையும் அவரிடமே சிறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.