அவரது வாழ்க்கையில் முதலில் அவள்; எப்போதும் 3வது இடம்தான் எனக்கு - இமான் மனைவி பேட்டி!
இசையமைப்பாளர் டி இமானின் மனைவி நேர்காணல் ஒன்றில் கணவர் இமானை குறித்து பேசியுள்ளார்.
டி இமான்
திரைப்பட இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருபவர் டி இமான். கடந்த 2002ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் 'தமிழன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் இசையமைத்த 'விசில்' என்ற திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா, கும்கி, மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், போகன், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் டி இமான்.
இவர் தனது முதல் மனைவியை மோனிகா என்பவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் டி இமானும், அவரின் மனைவியும் அண்மையில் யூடியூபி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தனர்.
மனைவி பேட்டி
அதில் அமலி பேசியதாவது "நான் அவரை வீட்டில் அத்தான் என்று தான் அழைப்பேன். என்னை ஆசையாக அம்மு என்று இமான் அழைப்பார். அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்ப்ரைஸ் செய்வார். அவர் மிகவும் அமைதியானவர்.
எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது வாழ்க்கையில் முதலில் மகளுக்கு முதலிடத்தைக் கொடுப்பார்.
இரண்டாவதாக இசைக்கு, மூன்றாவது இடத்தை தான் எனக்கு அவர் தருகிறார். நான் அவருக்கு முதன்முறையாக கொடுத்த கிஃப்ட் என்னுடைய மகள் நேத்ராவின் பல்லு தான். நான் சிறுவயதிலிருந்தே நேத்ராவின் பற்களை சேமித்து வருகிறேன். அதில் ஒரு பல்லை இவரிடம் கொடுத்து, இது மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்று என்று சொன்னேன் ”என்று அமலி பேசியுள்ளார்.
You May Like This Video