கள்ளக்காதலனின் காது, மூக்கை அறுத்த கொடூர கணவன்! அதிர்ச்சியில் உறைந்த மனைவி!
பாகிஸ்தானில் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளைஞரின் காது, மூக்கை வெட்டி வீசிய கணவனி செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முஸ்பர்கர் கிராமத்தில் அப்துல் கையும் என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த முஹம்மது அக்ரம் என்ற நபருக்கும் அப்துல் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் கணவன் இல்லாத நேரத்தில் அடிக்கடி, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை கண்டறிந்த கணவர், மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனால் இவர்களது தொடர்பை துண்டித்து கொள்ளாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர் முஹம்மத்தின் காது, மூக்கை கத்தியால் வெட்டி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் வலியால் துடித்து கொண்டிருந்த முஹம்மத்தை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அப்துல்லை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil