மனைவியை பலாத்காரம் செய்யும் மந்திரவாதி - கணவரே வீடியோ எடுத்த கொடூரம்!
மத்திய பிரதேசத்தில் மனைவியை பலாத்காரம் செய்யும் மந்திரவாதியை தடுக்காமல், வீடியோ எடுத்த கொடூர கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் பல நாட்களாக குழந்தை இன்றி தவித்து வந்துள்ளனர். இதனால் அந்த கணவர் குழந்தை பாக்கியத்திற்காக ஒரு மந்திரவாதியை நாடினார்.
அந்த மந்திரவாதியோ அவரது மனைவியை நள்ளிரவு நேரம் அழைத்து வர சொல்லியும், அவரோடு தான் உறவு வைத்தால் மலட்டு தன்மை நீங்கும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கணவர், மனைவியை அழைத்து கொண்டு மந்திரவாதியிடம் சென்றார். பிறகு அந்த மந்திரவாதியோ அந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டார். இதனை அவரது கணவரே வீடியோ எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு நேர்ந்த கொடுமையை, அந்த பெண் அக்கம் பக்கத்தாரிடம் புலம்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவன் மற்றும் மாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.