நான் கர்ப்பமா இருக்கும்போது.. ஜெயம் ரவியின் செயல்கள் - மனைவி ஆர்த்தி ஓபன் டாக்!

Jayam Ravi Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 25, 2024 07:36 AM GMT
Report

கர்ப்ப காலத்தில் ஜெயம் ரவி தன்னை எப்படி கவனித்துக்கொண்டார் என்பது குறித்து அவரது மனைவி ஆர்த்தி பேசியுள்ளார். 

ஜெயம் ரவி

ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கு எனக்கும், தீபாவளி,

நான் கர்ப்பமா இருக்கும்போது.. ஜெயம் ரவியின் செயல்கள் - மனைவி ஆர்த்தி ஓபன் டாக்! | Wife Aarthi About Her Husband Jayam Ravi

சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், தனி ஒருவன், கோமாளி, பொன்னியின் செல்வன், இறைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்மையில் தனது மனைவி ஆர்த்தியுடன் நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி கலந்து கொண்டார். அப்போது, கர்ப்ப காலத்தில் ஒரு கணவனாக ஜெயம் ரவி தன்னை எப்படி கவனித்துக்கொண்டார் என்பது குறித்து ஆர்த்தி பேசினார்.

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ!

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ!

ரவி மாதிரி இருக்கணும் 

அவர் கூறியதாவது "முதல் மகன் ஆரவ் பிறக்கும்போது ரவி ஊரிலேயே இல்லை. அவர் இங்கே இருக்கவேண்டும் என்று தான் திட்டமிட்டார். ஆனால், என்னுடைய பிரசவம் சீக்கிரமாக ஆகிவிட்டது.

நான் கர்ப்பமா இருக்கும்போது.. ஜெயம் ரவியின் செயல்கள் - மனைவி ஆர்த்தி ஓபன் டாக்! | Wife Aarthi About Her Husband Jayam Ravi

எனக்கு தெரியும் அவரின் தொழில் அப்படிதான் என்று. ஆனால் என்னுடைய கர்ப்ப காலத்தில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நான் வாந்தி எடுக்கும்போதெல்லாம் அதை ரவி கையிலேயே பிடிப்பார். அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நிறையவே எனக்கு பண்ணியிருக்கிறார்.

பக்கத்திலேயே இருப்பார். அதிகாலை 3,4 மணிக்கெல்லாம், நான் எதையாவது சாப்பிட வேண்டும் என்று கூறினால் எழுந்து வருவார். பின்னர் 5 மணிக்கு தூங்கிவிட்டு ஷூட்டிங் சென்று விடுவார்.

ஒரு கணவனாக அவருக்கு நான் 100-க்கும் மேல் மார்க் கொடுப்பேன். ஒரு கணவனாக எல்லோரும் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன்" என்று தெரிவித்துள்ளார்.