விதவை பெண்ணை அடித்து உதைத்து துரத்திய கூட்டம்
ஒரு விதவை பெண்ணை அடித்து உதைத்து ,தலைமுடியை வெட்டி ஊரை விட்டே துரத்திய கூட்டத்தினை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கானிங் பகுதியின் உள்ள டபுவில் வசித்த ஒரு இளம் பெண்ணின் கணவர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பிறகு அவர் தன் இரண்டு மகன்களுடன், தன் மாமனார் வீட்டில் வசித்தார்.
அப்போது அந்த பெண் மீது இறந்த கணவரின் மூத்த சகோதரர் ஆசைப்பட்டார் .அதனால் ஏற்கனவே கல்யாணமான அவர் அந்த பெண்ணை டார்ச்சர் செய்து வந்துள்ளார் .ஆனால் அந்த பெண் அவரை வெறுத்து ஒதுக்கினார் .அதனால் அவரின் டார்ச்சரை பார்த்து அந்த பெண்ணின் மைத்துனர் குதிராம் சர்தார் என்பவர் அவருக்கு உதவி புரிந்து அவரிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி வந்துள்ளார் .
இதனால் அந்த ஊர் மக்களிடம் ,அந்த இறந்த கணவரின் அண்ணன் பரிதோஷ் அந்த பெண்ணுக்கு அவரின் மைத்துனர் குதிராமுடன் கள்ள உறவு இருப்பதாக புரளி பேசினார் .அதன் பிறகுஜூன் 28 அன்று அந்த ஊரில் உள்ள சிலருடன் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணின் தலை முடியை வெட்டி ,அடித்து உதைத்து தாக்கினார்கள் .பிறகு அந்த விதவை பெண்ணையும் அவரின் மைத்துனரையும் அந்த ஊரை விட்டே அடித்து துரத்தினார்கள் .அதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று அவர்கள் மீது புகார் கூறினார் .போலீசார் இது சம்பந்தமாக ஏழு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .