சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை
Chennai
By Thahir
சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்துார், ஆவடி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.