சென்னையில் காலை முதல் பரவலாக கனமழை..!

Chennai
By Thahir Aug 03, 2022 04:39 AM GMT
Report

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் 

நடப்பாண்டில் இயல்பை விட 94 % அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் நீடிக்கும் எனவும் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 4ம் தேதி நாளை நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக்கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழை 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai Rain

இந்த நிலையில் காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை,கோயம்பேடு, வட பழனி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, ஆலந்துார், உள்ளிட்ட இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.