ஆஸி.யை ஓட ஓட விரட்டிய வெஸ்ட் இண்டீஸ்... அப்ப டி20 கோப்பை போச்சா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அசத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் 5வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எவின் லீவிஸ் 79 ரன்களும், கேப்டன் பூரன் 31 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட்இண்டீஸ் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மிக விரைவில் டி20 உலகக் கோப்பை நடைபெற இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றி அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத் தரும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்