கல்யாணத்துக்கு கூட வராத யுவன் ..பிரேம்ஜி மேல அப்படி ஒரு வெறுப்பு !! பிரபலம் சொன்ன பகீர் தகவல்!!
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
பிரேம்ஜி
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் பிரேம்ஜி. அப்பா வெற்றி பெற்ற இயக்குனர், இசையமைப்பாளர். இளையராஜாவின் குடும்பம். சாதாரணமாக இசை தெரிந்துக்கொண்ட பிரேம்ஜி அண்ணன் வெங்கட் பிரபுவின் முதல் படமான “சென்னை 28”’இல் நடிகராக ரசிகர்களை காமெடியில் கவர்ந்தார்.
அதனை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க, துவங்கியவர் இடையில் பாடல்கள் பாடுவதும், இசையமைப்பதும் செய்து வந்தார். கவனம் பெற்ற நடிகராக மாறிய போது, திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார் பிரேம்ஜி. அவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்விகளை நேரடியாக கேட்டனர். அப்பொதெல்லாம், முரட்டு சிங்கிள் என பதிலளித்தார் பிரேம்ஜி. திடீரென அறிவிப்பு வெளியாகி, கடந்த ஜுன் 9-ஆம் தேதி, திருமணமும் செய்து கொண்டார் பிரேம்ஜி.
வராத யுவன்
அவரின் திரைத்துறை நண்பர்கள் பலரும் கலந்துக்கொண்ட நிலையில், உறவினரான யுவன் சங்கர் ராஜா, திருமணத்திற்கு வரவில்லை. அது குறித்து, பல வித பேச்சுக்கள் வெளிவர துவங்விட்டன. அதைப்பற்றி, சினிமா குறித்து தொடர்ந்து பேசி வரும் செய்யாறு பாலு, அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
அவர் பேசும் போது, திருமணத்தில் இளையராஜா கலந்துக்காதது வேதனையாக இருக்கு. பெரியவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இந்த திருமணத்திற்கு யுவன் வந்து இருக்க வேண்டும்.
துபாயில் யுவன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியே என்றாலும், தம்பியின் திருமணத்திற்கு யுவன் வந்திருக்கலாம். பிரேம்ஜி மீது என்ன வெறுப்பு என தெரியவில்லை. சிலர் யுவன் மதமாறிய காரணத்தால், கோவிலில் நடைப்பெற்ற திருமணத்திற்கு அவ்ர் வரவில்லை என்று கூறுகிறார்கள் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசினார்.