ஃப்ரிட்ஜில் வெங்காயத்தை இப்படி வைக்கிறீங்களா? இந்த ஆபத்து வரும் - திகிலூட்டும் நிபுணர்கள்..!
நறுக்கிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நறுக்கிய வெங்காயம்
இன்றைய நவீன உலகத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளை நாம் பார்க்கவே முடியாது. குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.ஆனால் நம்மில் பலர் பிரிட்ஜில் நாம் பழங்கள், காய்கறிகள் உணவுகளை சேமித்து வைக்க பயன்படுத்துகிறோம்.
அதிலும் வேலைக்கும் செல்பவர்களின் வீடுகளில் ஒரு நாள் முன்பே பிரிட்ஜில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்வர். இப்படிச் செய்வதால் காலையில் எளிதில் சமைப்பது சுலபமாகிவிடும்.
ஆனால் இப்படிச் செய்வதால் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.மேலும் நறுக்கிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கும். இப்படிச் செய்வதால் வெங்காயத்தில் உள்ள சத்துகள் குறையத் தொடங்கும்.
பாதிப்புகள்
நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட பல வகையான நுண்ணுயிரிகள் நுழையும்.இதனால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்படும்.
குறிப்பாக நுண்ணுயிரிகள் மூலம் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வெங்காயத்தை வெட்டி தோலை நீக்கி சேமித்து வைக்கும் போது மற்றொரு ஆபத்தும் உள்ளது.வெங்காயத்தை வெட்டி வைத்திருந்தால், பல வகையான ரசாயனங்கள் வெளியாகும்.
இவை பாக்டீரியாக்களை ஈர்க்கும் ஊட்டச்சத்துக்களாக மாறி அவற்றின் வளர்ச்சியை ஏற்படுத்தும். 24 மணி நேரத்திற்கு மேல் ஃப்ரிட்ஜில் எந்தவிதமான உணவுப் பொருளையும் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. நறுக்கிய வெங்காயத்தைக் காய்கறிகளுடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாகிவிடும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.