பரந்தூரில் 500 குடும்பங்கள் தான் இருக்கு.. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி-தமிழக அரசு விளக்கம்!
பண்ணூருக்கு பதிலாக பரந்தூரை தேர்வு செய்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பரந்தூர்
சென்னையை ஆசியாவிலேயே முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றவும், 20,000 ரூபாய் மதிப்பீட்டில் பாரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்புதிதாக விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், சுமார் 12 கிராமங்களும் அம்மக்களின் வாழ்வாதார விளைநிலங்களும் உள்ளன.
இந்த நிலையில் பண்ணூருக்கு பதிலாக பரந்தூரை தேர்வு செய்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் . பரந்தூரில் உள்ள திட்டத் தளம்,
தமிழக அரசு
வரவுள்ள சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்கு அருகில் உள்ளது மட்டுமின்றி தேவையான இடங்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் சென்றுவர வசதியானது.மேலும் பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் பரந்தூரில் 500 குடும்பங்கள் குறைவாக 1005 குடும்பங்களே வசிக்கின்றன.
டெல்லி விமான நிலையம் 5,106 ஏக்கரும்; மும்பை விமான நிலையம் 1,150 ஏக்கரும்;ஐதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கரும், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர் பரப்பும் கொண்டவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில் சிறியதாக உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.