பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக்கொலை - கைதானவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்
உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியும் முன்னாள் எம்பியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரன் அஷ்ரப் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கைதானவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திடுக்கிடும் வாக்குமூலம்
கைதான ஆதிக் அகமதுவையும், அவரது சகோதரன் அஷ்ரப் அகமதுவையும் மிக அருகில் இருந்து சுட வேண்டும் என முடிவு செய்து, பத்திரிக்கையாளர்கள் போல் போலி அடையாள அட்டை, மைக் போன்றவற்றுடன் இடுப்பில் துப்பாக்கிகளையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
3 பேரும் சேர்ந்து 22 விநாடிகளில் மொத்தமாக 20 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்ற மூவரையும், 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில்அடைக்க பிராக்ராஜ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.