எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்?
தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சக்தி வாய்ந்த தலங்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில். இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெரிய முக்கியமான பிரமுகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இந்த ஆலயத்திற்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.
இது ஒரு பிரபலமான மற்றும் முக்கியமான வழிபாடுகளாக மாறிவிட்டது. ஆனால் எதற்காக அவர்கள் வாள் காணிக்கையாக கொடுக்கிறார்கள் என்று சந்தேகம் பலருக்கும் வருகிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

51 சக்தி பீடங்களில் மிக முக்கியமானதாகவும் கர்நாடகா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றாகவும் இந்த கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் இருக்கிறது.
இங்கு முப்பெரும் தேதியர் லிங்க வடிவில் காட்சி தருவதாகவும் அவர்களுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாகவும் ஐதீகம். இவ்வளவு சக்தி வாய்ந்த கோவிலில் கலைஞர்கள் தங்களுடைய கலையை அரங்கேற்றம் செய்து மூகாம்பிகைக்கு அந்த கலையை அஞ்சிலியாக செலுத்துவதற்கும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும்.
எம்ஜிஆர் முதல் விஜய் வரை
இந்த ஆலயத்திற்கு முக்கியமான பிரமுகர்கள் முதல் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வரை வாள் காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். அதாவது தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் இரண்டரை அடி உயர தங்கவாளை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.
அதேபோல், சமீபத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடிய விஜய் அவர்களும் 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள் காணிக்கையாக அளித்திருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதிகளும் பலரும் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.

வாள் காணிக்கை துவங்கிய வரலாறு
இவ்வாறு காணிக்கையாக செலுத்தப்படுவது இன்றைய அரசியல் தலைவர்களால் தொடங்கப்பட்டது கிடையாது. அது 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே கேரளடி நாயக்க மன்னர்களும் இங்கு மூகாம்பிகை அம்மனை வாள் காணிக்கை செலுத்தி வழிபட்டிருக்கிறார்கள். இதற்கு சாட்சியாக 1481 ஆம் ஆண்டு கல்வெட்டு இருக்கிறது.
இதனை தவிர்த்து திப்பு சுல்தானுக்கு இந்த கோவிலுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது திப்பு சுல்தான் இக்கோவிலை தாக்க வந்த பொழுது தாக்க முடியாமல் தோல்வியை சந்தித்திருக்கிறார். பிறகு அங்கு வீற்றிருக்கக்கூடிய அம்மனின் உடைய மகிமையை உணர்ந்து வழிபாடு செய்ததாகவும்.
மாலை நேர தீபாரதனையை பார்த்த திப்பு சுல்தான் அம்மனுக்கு சலாம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இன்றும் "சலாம் மங்களாரத்தி" மாலை நேரத்தில் இப்போது நடத்தப்படுகிறது. ஏன் வாளை காணிக்கையாக கொடுக்கிறார்கள்? பொதுவாக, வாள் என்பது வீரத்தையும் வெற்றியையும் குறிக்கக் கூடியது.
அரசர்கள் ஒரு போருக்கு செல்வதற்கு முன்பாக அந்த போரில் அவர்கள் வெற்றி பெறவும் வெற்றி பெற்ற பிறகும் தங்களுடைய வாளை கடவுளுக்கு முன் அர்ப்பணித்து வணங்குகிறார்கள். காலப்போக்கில் இது பெரிய பதவிகளில் வகிக்கக்கூடிய அரசின் உயரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தலில் அவர்களுடைய வெற்றி பலம் அதிகரிக்க இந்த கோயிலில் அவர்கள் வாள் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.
சொர்ணரேகையின் சிறப்பு
கருவறையில் மூகாம்பிகை அம்மன் சிலை மட்டும் கிடையாது. அம்மனுக்கு முன்னால் ஸ்வர்ணரேகை உடன் கூடிய ஜோதிலிங்கமும் இருக்கிறது.
மேலும், அதில் இருக்கக்கூடிய ஒரு தங்க கோடானது சிவபெருமானும் சக்தியையும் ஒன்று என்பதை குறிக்க கூடியதாக இருக்கிறது. அதனால், இங்கு வந்து வழிபாடு செய்ய சிவ சக்தியின் அருளால் நமக்கு நிலையான வெற்றியும் பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், கொல்லுர் மூகாம்பிகை அம்மன் தீய சக்திகளை அடியோடு அழிக்கவும் எதிரிகளை செல்லவும் வீரத்தை வழங்கக்கூடிய தெய்வமாகவும் இருக்கிறார். இதனால் அரசியல் தலைவர்கள் முதல் விஐபிகள் வரை இங்கு வந்து வழிபாடு செய்து அவர்களுடைய காணிக்கையாக வாள் செலுத்துகிறார்கள.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 1977 ஆம் ஆண்டு காணிக்கையாக வழங்கிய அந்த தங்க வாள் இன்றும் முக்கிய திருவிழாக்கள், உற்சவம் உங்களின் பொழுது அம்மனுக்கு சாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பல தலைவர்களும் அதனை பின்பற்றி நடிகர்களும் வாள் காணிக்கையாக அளிக்க கூடிய வழக்கம் தொடர்கிறது.