பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேற உண்மையான காரணம் இதுதான் தெரியுமா?

vanithavijayakumar SilambarasanTR biggbossultimate
By Petchi Avudaiappan Feb 24, 2022 07:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தை நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்த டபுள் எவிக்‌ஷன் முறையில் ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ மற்றும்‌ விக்ரம்‌ படப்பிடிப்பு இரண்டையும்‌ ஒரே நேரத்தில்‌ மேற்கொள்ள முடியாத சூழல்‌ உருவாகிவிட்டதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் இந்நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதனிடையே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வனிதா பல சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கடந்த வாரம் கேப்டனாக செயல்பட்ட அவர் மீது மற்றவர்கள் விமர்சனங்கள் முன்வைக்க இதனால் கடும் ஆத்திரமடைந்தார். 

தொடர்ந்து மிகவும் சோர்வாக இருந்த வனிதா, வீட்டை விட்டு அனுப்பும்படி பிக்பாஸிடம் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய பிக் பாஸ், தைரியமாக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். ஆனால் தொடர்ந்து இருக்கமுடியாத காரணத்தால் வனிதா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 

இந்நிலையில் வனிதா வெளியேறியதால் ட்விட்டரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்ற பயத்தில் வனிதா அக்கா வெளியே போய்விட்டார்கள் என கருத்துக்கள் பறந்தன. 

இதனைக் கண்டு கொதித்தெழுந்த வனிதா ரம்யாகிருஷ்ணன் வருவதால் நான் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவில்லை. பொய்யான தகவலை பரப்பாதீர்கள். என்னுடைய உடல்நிலையையும், மனநிலையையும் கருத்தில் கொண்டுதான் நான் இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு உதவிய ஹாஸ்டார் நிறுவனத்திற்கும், பிக் பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என கூறியுள்ளார்.