SIR க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம் - தவெக புறக்கணித்தது ஏன்?
SIR க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக புறக்கணித்துள்ளது.
SIR க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கான(SIR) அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக விவாதிக்க, இன்று சென்னை திநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக முதல்வர் முகஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விஜய் தலைமையிலான தவெக கலந்துகொள்ள திமுக சார்பில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளர் ஆனந்திடம் நேரில் அழைப்பு விடுத்தார்.
தவெக புறக்கணிப்பு
இந்நிலையில், தவெக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டத்தை கூட்டி இருந்தால் பங்கேற்று இருப்போம் எனவும், திமுக சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதால் பங்கேற்க முடியாது எனவும் அக்கட்சி நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.

அதேவேளையில், “தமிழ்நாட்டில் SIR என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவதோ, இணைப்பதோ கண்டனத்திற்குரியது. இதனை தவெக எதிர்க்கிறது" என தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நாம் தமிழர், பாமக உள்ளிட்ட 20 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.