பல் குத்த குச்சியை பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்...!

toothpick பல் குத்தும் குச்சி
By Petchi Avudaiappan Dec 21, 2021 06:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

நம்மில் பலருக்கும் சாப்பாட்டிற்குப் பிறகு பற்களில் சிக்கும் உணவுகளை நீக்குவதற்கு டூத் பிக் எனப்படும் பல் குத்தும் குச்சியை பயன்படுத்துவது வழக்கம். இந்த குச்சியானது வாய் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்தும்போது முதலில் நமக்கு எந்தவித அறிகுறிகளும் தெரியாது. ஆனால் இந்த குச்சிகள் கூரான முனையைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அவை பற்களின் இடுக்குகளில் அல்லது ஈறுகளில் காயங்களை ஏற்படுத்தும். நமது ஈறுகள் மிகவும் மென்மையானவை என்பதால் தொடர்ந்து நாம் பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்தும்போது அவை ஈறுகளின் பல இடங்களில் இரத்த கசிவை ஏற்படுத்தலாம்.

இதனால் பற்கள்  பலவீனமடைந்து பற்களை இழப்பதற்கான அபாயத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். மேலும் பல் குத்தும் குச்சிகள் மரத்துண்டுகளால் செய்யப்பட்டவை. எனவே அவற்றைப் பயன்படுத்தும்போது அவை உடைந்து நமது ஈறுகளிலேயே தங்கிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பல் குத்தும் குச்சிகளில் பாக்டீரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.அதேசமயம் பல் குத்தும் குச்சியை பயன்படுத்த தெரியாதவர்கள், பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுகளை அகற்றுவதற்கு வாய் கொப்பளிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.