மும்பை வீரருக்கு முன்னுரிமை ... ருத்துராஜை கழட்டி விட்ட ரோகித் சர்மா : கோபத்தில் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறித்து இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கிற்கு பதிலாக பேட்டிங் தேர்வு செய்தார். சமீப காலமாக பனி காரணமாக கேப்டன்கள் எல்லோரும் டாஸ் வென்றால் பவுலிங்தான் தேர்வு செய்கிறார்கள். இன்றும் மைதானத்தில் நிறைய பனி இருந்தது.
அனால் ரோஹித் சர்மா ஆச்சர்யமாக இன்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இன்று இஷான் கிஷான், சாஹல் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் சேர்க்கப்படவில்லை. அவரை ஓப்பனிங் இறங்கிவிட்டு மிடில் ஆர்டரில் இஷானை கொண்டு வருவார்கள் என்றே எதிர்பார்கப்பட்டது. ஆனால் ருத்துராஜ் இன்று அணியில் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியில் இரண்டாவது சாய்ஸ் ஓப்பனர் இஷான் கிஷான்தான் என்று உறுதியாகி உள்ளது.
ஆனால் இது ருத்துராஜூக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். சையது முஸ்தாக் தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ஐபிஎல்லில் இவர்தான் டாப் ரன் ஸ்கோரர். இப்போது இந்தியாவில் டாப் பார்மில் இருக்கும் ஓப்பனர் அவர். இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுகிறார். இதனால் ரோஹித் சர்மா அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ.. இதுதான் அவரை அணியில் எடுக்க காரணமோ என்று கேள்வி எழுந்துள்ளது.