ஜெர்சி நிறத்தை மாற்றிய RCB - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
RCB அணிக்கு RR க்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்ஸசி அணிந்து விளையாடி வருகிறது.
RCB vs RR
2025 ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
பச்சை நிற ஜெர்சியில் RCB
இந்த போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது. 2011 முதல் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டியில் பெங்களூர் அணி பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்குகிறது.
மரம் வளர்ப்பு மற்றும் புவி வெப்பமடைதலின் தாக்கத்தை குறைக்கும் நோக்கிலும் ஒரு விழிப்புணர்வுக்காக பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இதை பின்பற்றி வருகிறது.
இந்த பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்று RCB தெரிவித்துள்ளது.
RETURN RECYCLE REPEAT: Our Commitment to Sustainability ♻️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 13, 2025
All RCB jerseys are made of 95% textile and polyester waste, and can be recycled several times without losing quality, through Puma’s ReFibre Fabric.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #RRvRCB pic.twitter.com/vZuhipipkP
இதுவரை பச்சை நிற ஜெர்சி அணிந்து RCB விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் தான் RCB வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது, 1 போட்டி முடிவின்றி ரத்தாகி உள்ளது.
இந்த போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தால், ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்வார்.
டேவிட் வார்னர் 66 அரைசதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 65 அரை சதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.