சென்னைக்கு எதிரான போட்டியில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிய பெங்களூரு வீரர்கள் - என்ன காரணம்?
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர்.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் உத்தப்பா 88, ஷிவம் டூபே 94 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து கடினமான இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணியில் ஷபாஸ் அகமது 41, தினேஷ் கார்த்திக் மற்றும் பிரபுதேசாய் 34, மேக்ஸ்வெல் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் பெங்களூரு அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதனிடையே இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சல் பட்டேலின் சகோதரியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பெங்களூர் வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.