5 ரூபாய் நாணய தயாரிப்பை நிறுத்தும் ரிசர்வ் வங்கி - என்ன காரணம்?
தடிமனான 5ரூபாய் நாணய தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.
ரூ.5
நாணயம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறி விட்டாலும், முழுமையாக டிஜிட்டல் மயமாகாத நிலையில் இன்னும் பணம், நாணயங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பேருந்துகளில் டிக்கெட் எடுக்க, போன்ற நாணயங்களின் தேவை உள்ளது. இந்தியாவில் தற்போது ரூ.1 ரூ.2 ரூ.5, ரூ.20 வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
தயாரிப்பு நிறுத்தம்
இதில் பித்தளையால் ஆன 5 ரூபாய், தடிமனான உலோக 5 ரூபாய் இரண்டு வகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது, தடிமனான உலோக நாணயங்களின் புழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் தடிமமான 5ரூபாய் நாணயத்தை அச்சடிப்பதை நிறுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
காரணம் தடிமமான ஒரு 5 ரூபாய் நாணயத்தை உருக்கி 5க்கு மேற்பட்ட பிளேடுகளை செய்ய முடியும். இதனால் 5 ரூபாய் நாணயத்தை பதுக்கி சட்டவிரோதமாக பிளேடு தயாரித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத செயலுக்கு முடிவு காட்டும் வகையில் இந்த நாணய தயாரிப்பை நிறுத்தும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. ஆனால் புழக்கத்தில் உள்ள தடிமனான நாணயங்கள் செல்லும் எனவும் அறிவித்துள்ளது.