கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

Vijay Communist Party Of India DMK Seeman Karur
By Karthikraja Jul 09, 2026 02:15 PM GMT
Report

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

விஜய் தற்போது முதல்வராகவிட்ட நிலையில், அந்த சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாக கரூர் செல்லும் அவர், உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணைகளை வழங்க உள்ளார். 

கரூரில் ரோடுஷோ, 32 பேருக்கு பணி ஆணை - முதல்வர் விஜய்யின் பயணத்திட்டம்

கரூரில் ரோடுஷோ, 32 பேருக்கு பணி ஆணை - முதல்வர் விஜய்யின் பயணத்திட்டம்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் எதிர்ப்பு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. 

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது.

மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. 

எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். 

அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.பி சுப்பாராயன், தவெக பொறுப்பை ஏற்காமல் அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது என தெரிவித்துள்ளார்.

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்தியகூட்டநெறிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்! இந்த முடிவை அதிகாரத்துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும்! 

மேலும் எதிர்காலத்தில் அரசிற்கு கடும் நெருக்கடிகளைஇந்த முடிவு ஏற்படுத்தும்! இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும்!அவைதான் அதை செய்ய வேண்டும்! 

அதை செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக! அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது! தவெக அரசுஆழமாக சிந்திக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் எதிர்ப்பு

கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும்! அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது! 

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா? ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் கலைக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திடவும், அந்த ஆணையை விஜய் அவர்களே நேரடியாக வழங்கிடவும் நாளை (10.07.2026) அன்று அவர் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும். 

எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் வழக்கு

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க அனுமதிக்க கூடாது என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? இதய இடைத்தேர்தலை மனதில் வைத்து செய்யும் அற்பஅரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு

கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு

திமுக கடிதம்

மேலும், திமுகஅமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தில், "10.07.2026 (நாளை) அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூருக்குச் சென்று த.வெ.க. கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். 

கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? | Why Parties Oppose Govt Job For Karur Victims

இந்நிலையில், நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்தக் குடும்பத்தினர் மீது எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தப்படவோ, அவர்களுடன் தலையீடு மேற்கொள்ளப்படவோ கூடாது என்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் சி.பி.ஐ.யும் மேற்கொள்ளுமாறு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.

ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்ட அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் தொடர்பாக – சாட்சிகளுடன் அரசு நிர்வாகம் நேரடியாக தொடர்புகொள்வது, விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து நியாயமான ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவ்வழக்கின் சாட்சிகள் மீது இந்த நலத்திட்ட உதவிகளால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.