"இந்தியா" கூட்டணி காங்கிரஸ்'ஸுடன் ஏன் பேச்சுவார்த்தை இல்லை - துரைமுருகன் பதில்..!

M K Stalin Rahul Gandhi Tamil nadu DMK Durai Murugan
By Karthick Sep 13, 2023 09:49 AM GMT
Report

காவிரி விவகாரத்தில் இறுதி வழி உச்சநீதிமன்றத்தை நாடுவது தான் என தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் - துரைமுருகன் பேட்டி

நேற்று டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அந்த பரிந்துரையை ஏற்க கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதற்கிடையில் இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

why-not-taking-about-kaviri-in-india-allaince

உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என குறிப்பிட்டு, அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுகிறதா? என பார்க்க வேண்டும் என்றார். இல்லையெனில், தற்போது நிலை குறித்து இணைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய அவர், காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான் என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் பேச்சுவார்த்தை ஏன் இல்லை..?

உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 21-ஆம் தேதி காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டலாம் என விளக்கமளித்த துரைமுருகன், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்கிறது என குற்றம்சாட்டினார். அப்போது செய்தியாளர், "இந்தியா" கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் கர்நாடகா முதல்வரிடம் பேசினால் காவிரி பிரச்சனை சுமுகமாக முடிந்துவிடும், ஆனால் முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் எனக் கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினார்.

why-not-taking-about-kaviri-in-india-allaince

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தங்களைக் கெடுப்பதற்கு அப்படிச் சொல்கிறார்கள் என குற்றம்சாட்டி, பேச்சுவார்த்தை சரி இல்லை என்ற காரணத்தினால் தான் நாம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறோம் என்றும் மறுபடி, நாம் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால், நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்." எனத் சுட்டிக்காட்டினார்.