உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது? கடுப்பான ஐகோர்ட் கிளை
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமப்பை அகற்றாத அதிகாரிகள்
சென்னை எருக்கஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்தர ராம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது
மேலும் ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம்.
ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.