Wednesday, Jul 9, 2025

யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

maduraibranch banyoutube
By Irumporai 3 years ago
Report

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறினார். யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

யூடியூபை பார்த்து துப்பாக்கி செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என பலர் வாக்குமூலம் தருகின்றனர் என தெரிவித்தார். யூடியூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியது. தேவையற்ற பதிவுகளை தடுக்க சாத்தியக்கூறு உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க நீதிமதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதை தடுங்கள் என கூறினார். யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? யூடியூபுக்கு மொத்தமாக தடை விதிக்கலாமே எனவும் தெரிவித்தார். யூடியூபில் சில நல்ல விசயங்கள் உள்ளன,

இருப்பினும் தேவையற்ற பதிவுகள் செய்யப்பட்டால் தடை செய்யலாமே எனவும் அறிவுறுத்தினார். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது. சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது.