அதிமுக கூட்டணியில் இல்லை என்று எதற்கு வருத்தப்பட வேண்டும்?" அண்ணாமலை
கூட்டணியில் அதிமுக இல்லாததற்கு எதற்கு வருத்தப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வருத்தப்பட என்ன உள்ளது
இன்று சென்னையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு கட்சி கூட்டணியில் இருப்பதற்காக எதற்காக வருத்தப்படவேண்டும் - எதற்காக சந்தோசப்படவேண்டும் என கேள்வி எழுப்பி, போட்டி என்பது திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் என மீண்டும் கூறுவதாக தெரிவித்தார்.
மேலும், பாஜக கூட்டணியில் கட்சிகள் இணைவதை குறித்து தேசிய தலைவர் தான் முடிவு செய்யவேண்டும் என குறிப்பிட்ட அவர், எந்த பாதையில் செல்லவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 202-இல் அரசியல் மாற்றம் 2024-இல் தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அவர், தமிழகத்தில் பாஜகவை வலிமையடைய செய்வதே எனது நோக்கம் என்றார்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி
வாக்கு சதவீதம் உயர்வு போன்றவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும் என்று குறிப்பிட்டு, 2026-இல் மிக பெரிய அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று பிரிந்தவர்கள் நாளை சேரலாம் என குறிப்பிட்டு, ஒரு கட்சி வெளியேறுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று ஆகாது என தெரிவித்தார்.